தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.....?

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.....?

அதுவும் மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக..

இதோ உங்களுக்காக...



வளமான வருங்காலத்திற்கு ,நிகழ்காலத்திலேயே நல்லதோர் திட்டத்தை தேர்ந்தெடுத்து , அதில்  முதலீடு செய்வதே சால சிறந்தது.. சேமிப்பு என்பது அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களின் மூலமாகவோ, தங்கத்தில் முதலீடு செய்வது மூலமாகவோ  மற்றும் ஏனைய அசையும்/அசையா சொத்துக்கள் வாங்கி வைப்பது மூலமாகவோ நாம் செயல்படுத்தலாம்...

ஏறுமுகத்தில் உள்ள தங்கத்தில் முதலீடு செய்வதின் மூலம் , குறிப்பிட்ட காலம் கழித்து நமக்கு கட்டாயமாக ஓர் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்... அதே முறையில் தங்கத்தை விட லாபம் அளிக்கும் வகையில் , தங்கத்திற்கு பதிலாக தங்க பத்திர திட்டத்தை நமது  RBI மத்திய ரிசர்வ் வங்கியானது வழங்கி வருகிறது.. இதில் முதலீடு செய்ய அவ்வபோது RBI அறிவிப்பு வெளியிடும்...

அதுபோல் கடந்த 16.12.2022 வெள்ளியன்று RBI வங்கி வெளியிட்டுள்ள சவரன் தங்க பத்திர திட்டத்தின் (SGB- SovereignGoldBond) முக்கிய விபரங்கள் கீழ்க்கண்டவாறு...

 

முதலீடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ள நாட்கள்?

19.12.2022  திங்கள்  முதல்   23.12.2022 வெள்ளி வரை மட்டும்

 

விற்பனை விலை ?

ரூபாய் 5409 ஒரு கிராமிற்கு (24 கேரட் தங்கத்தின் தற்போதைய மதிப்பு)

 

ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு வாங்கலாம்/முதலீடு செய்யலாம் ?

4 கிலோ வரை

 

முதலீடு காலம்  எவ்வளவு ?

8 வருடங்கள்

 

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

8  வருடம்  கழித்து அப்போதைய தங்கத்தின் (24 கேரட்) விலைக்கு ஈடான தொகை

(தகவலுக்காக : 2016-17 நிதியாண்டில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.2834. தற்போது ரூ.5409)

 

கூடுதல் பலன்கள் ஏதேனும் உண்டா?

முதலீடு காலமான 8  வருடங்களில் ,ஒவ்வொரு வருடமும் 2.5% வட்டி விகிதத்தில் கணக்கிட்டு வட்டி தொகையானது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்

 

8 வருடத்திற்கு முன்னமே முதலீட்டை திரும்ப பெறலாமா ?

ஆம்.. 5 வருடங்கள் கழித்து கணிசமான லாபத்துடன்  எப்பொழுது வேண்டுமானாலும் ..

 

வங்கிகளில்அடகுவைக்கலாமா?

ஆம்

 

முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும் ?

அருகிலுள்ள அஞ்சலகத்தை அல்லது உங்கள் தபால்காரரை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்..

 

முதலீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

1.   ஆதார் நகல் 1

2.   PAN நகல் 1

3.   பாஸ்போர்ட் SIZE புகைப்படம் 1

4.   வங்கி புத்தகத்தின் முதல் பக்க  நகல் 1

5.   INVESTOR ID (ஏற்கனவே SGB திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால்)

 

அரசாங்கத்தின் மூலம் 120% தங்கத்திற்கு இணையான  பலனை தரக்கூடிய முதலீடு

(24 கேரட் தங்கத்தின்  மொத்த மதிப்பு +2.5% X 8 வருடங்கள்)





Regards,

PINKODE TEAM

Comments

Popular posts from this blog